CRIME
“காலில் விழுந்து முத்தம் கொடு..!” சிறுவனைத் துன்புறுத்திய சண்டியர்கள்.. அடுத்த நொடியே மக்கள் செய்த அதிரடி காரியம்.. இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..!!
பாகிஸ்தானின் முசாஃபர்கர் மாவட்டத்தில் உள்ள கான்கர் பகுதியில், சிறு வாய் தகராறு காரணமாக அலி என்ற சிறுவனை மூன்று சிறுவர்கள் சேர்ந்து கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அத்தோடு நிற்காமல், அந்த சிறுவனைத் தங்களின் கால்களைக் கட்டாயப்படுத்தி முத்தமிட வைத்துள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயலை அவர்கள் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளூர் மக்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து அறிந்த உள்ளூர் மக்கள், அந்தப் பாதிப்பை ஏற்படுத்திய மூன்று சிறுவர்களையும் பிடித்து, அவர்கள் செய்த அதே பாணியில் பாதிக்கப்பட்ட சிறுவனின் கால்களைப் பிடித்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இந்த இரண்டாவது சம்பவத்தின் வீடியோவும் இணையத்தில் மிக வேகமாகப் பரவியது. இருதரப்பு வீடியோக்களும் வைரலானதைத் தொடர்ந்து, இந்த சட்டவிரோதச் செயல்கள் குறித்து கான்கர் பகுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது தீவிரமான சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.
