CRIME
“இப்படியா வண்டி ஓட்டுவாங்க..?” ராங் சைடில் வந்த இரு வாகனங்கள்… நடுவழியில் காத்திருந்த ஆபத்து.. வளைவில் நொறுங்கிய ஸ்கூட்டர்.. நெஞ்சை பதறவைக்கும் பகீர் சிசிடிவி..!!
மகாராஷ்டிர மாநிலம் யவத்மாலில் போக்குவரத்து விதிகளை அப்பட்டமாக மீறி தவறான திசையில் வந்த இரு வாகனங்கள் மோதிக்கொண்ட நெஞ்சை பதறவைக்கும் சாலை விபத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சாலையில் போக்குவரத்து ஒழுங்குமுறையைக் குறிக்கும் “இரட்டை தொடர் வெள்ளை கோடுகள்” இருந்தும், வாகன ஓட்டிகள் அதனைப் பொருட்படுத்தாமல் விபரீதமாகச் செயல்பட்டுள்ளனர். ஸ்கூட்டரில் வந்த நபர் ஒருவர் சாலையின் தவறான திசையில் பயணித்து, திடீரென இடது பக்க சாலைக்கு மாறுவதற்காக அந்த இரட்டை வெள்ளைக்கோட்டைத் தாண்டியுள்ளார்.
அதே தருணத்தில், எதிரே வந்த ஸ்விப்ட் காரை முந்துவதற்காக ஒரு ஸ்கோடா குஷாக் காரும் அந்த வளைவில் தவறான திசையில் அதிவேகமாகப் பாய்ந்து வந்துள்ளது. இதனால் காரும் ஸ்கூட்டரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. மேலும், அந்தச் சாலையில் கொட்டிக்கிடந்த மணல் மற்றும் சேறு காரணமாக வாகனங்களின் டயர்கள் கிரிப் கிடைக்காமல் நழுவியதும் இந்த விபத்தின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது. சாலை விதிகளை மதிக்காமல் அலட்சியமாக ஓட்டுவது எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக மாறியுள்ளது
