LATEST NEWS
எல்.முருகன் ராஜினாமா செய்த ராஜ்யசபா சீட்… காய் நகர்த்தும் வானதி சீனிவாசன்..! அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு..!!
மத்திய இணை அமைச்சர் பதவியை எல்.முருகன் ராஜினாமா செய்துள்ள நிலையில், காலியாகும் ராஜ்யசபா இடத்திற்கான இடைத்தேர்தல் நவம்பர் 12-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், அப்பதவியைக் கைப்பற்ற தமிழக பாஜகவினர் இடையே தீவிர போட்டி நிலவி வருவதாகவும், குறிப்பாக வானதி சீனிவாசன் இதற்காகத் தீவிர காய் நகர்த்தி வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தென் மாநிலங்களைச் சேர்ந்த தகுதியான ஒருவருக்கு இம்முறை நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் சீட் வழங்க பாஜக மேலிடம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வானதி சீனிவாசன் முயன்று வருவதோடு, தில்லி மேலிடத்தின் நன்மதிப்பைப் பெற்று தனது நீண்ட நாள் தேசிய அளவிலான அரசியல் இலக்கை எட்ட முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
