CINEMA
“சும்மா மஜாவா இருக்குதே” ராயன் படத்தின் “வாட்டர் பாக்கெட்” பாடலின் வீடியோ Youtube-ல் வெளியீடு…!!
நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்தால் திரைப்படம் ராயன் .இந்த படம் ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தம்பிகளும், ஒரு தங்கையும் இருப்பார்கள். இவர்கள் மூன்று பேரையும் சிறுவயதிலிருந்தே நடிகர் தனுஷ் வேலை செய்து காப்பாற்றி வருவார். இதற்கிடையில் ஏற்படும் பிரச்சனைகளை வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் “உசுரே நீதானே” என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் மிகப் பிரபலமானது. அதேபோன்று இந்த படத்தின் வாட்டர் பாக்கெட் பாடலும் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் தற்போது இந்த வீடியோ பாடல் youtubeபில் வெளியாகியுள்ளது. இதுவரை தனுஷ் நடித்து வெளியான படங்களிலேயே முதல் நாள் வசூலில் ராயன் படம் புதிய சாதனை படைத்துள்ளது . 2024 இல் இதுவரை வெளியான தமிழ் படங்களில் ராயல் வசூலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.