தமிழ் சினிமாவில் துணை கதாநாயகியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஜெயசுதா. இவர் சொல்லத்தான் நினைக்கிறேன் மற்றும் அபூர்வ ராகங்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இவரின் நடிப்புக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த அசத்தியிருந்தார். இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இதனிடையே ஜெயசுதா ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்.
தற்போது இவர் அமெரிக்காவில் வசித்து வரும் பிரபல தொழிலதிபர் ஒருவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்ய உள்ளதாக ஒரு செய்தி வெளியானது. இது தொடர்பாக ஜெயசுதாவிடம் கேட்டதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். இந்நிலையில் ஜெயசுதா பிலிப் ரூல்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.