“அடக்கொடுமையே.. கணவனை அடித்து வீழ்த்திவிட்டு..” மனைவியை மாந்தோப்பிற்குள் இழுத்துச் செல்லப்பட்டு 8 பேர் கும்பலின் வெறிச்செயல்.. நெஞ்சை பதறவைக்கும் விபரீதம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடக்கொடுமையே.. கணவனை அடித்து வீழ்த்திவிட்டு..” மனைவியை மாந்தோப்பிற்குள் இழுத்துச் செல்லப்பட்டு 8 பேர் கும்பலின் வெறிச்செயல்.. நெஞ்சை பதறவைக்கும் விபரீதம்..!!

Published

on

பீகார் மாநிலம் மோதிஹாரி-மதுபன் பகுதியில், துர்கா பூஜை திருவிழாவிற்குச் சென்றுவிட்டுத் திரும்பிய தம்பதியை ஒரு கும்பல் வழிமறித்துத் தாக்கியதோடு, பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருவிழாவை முடித்துவிட்டு தம்பதியினர் தங்களது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அவர்களை வழிமறித்துப் பணம் கேட்டு மிரட்டியுள்ளது. தன்னிடம் பணம் இல்லை என்று கணவர் கூறியதால், அவரது செல்போனைப் பறித்த அக்கும்பல் ஆன்லைன் மூலம் ரூ. 3,000 பணத்தை அனுப்பும்படி வலுக்கட்டாயமாக மிரட்டியுள்ளது.

பணத்தைப் பறிக்க முயன்ற கும்பலை எதிர்த்துக் கணவர் போராடியதால், அங்கிருந்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை மிருகத்தனமாகத் தாக்கி கீழே தள்ளியுள்ளது. அதன் பிறகு, அக்கொடூரர்கள் அந்தப் பெண்ணை அருகில் இருந்த ஒரு மாந்தோப்பிற்குள் இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இந்த கொடூரச் செயலை அவர்கள் வீடியோவாகவும் பதிவு செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றத்தில் ஈடுபட்ட அந்த 8 பேரையுமே கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in