CRIME
“எனக்கு நீதி வேண்டும், கேப்டனை பார்க்க விடுங்க..!” போலீசே செய்த துரோகம்.. எஸ்பி அலுவலகத்தில் கதறி அழுத பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில், நிலத் தகராறு ஒன்றில் எதிர்க்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமிக்கப் போலீஸ் நிர்வாகம் உதவியதாகக் குற்றம் சாட்டி சுஷ்மா யாதவ் என்ற பெண் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் வாரந்தோறும் மனுநீதி நாள் போன்ற குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும், தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும், உள்ளூர் காவல் ஆய்வாளர் தனது புகாரைக் காதுகொடுத்துக் கேட்கக்கூட மறுக்கிறார் என்றும் அந்தப் பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
“எனக்கு நீதி வேண்டும், எனக்கு ஏதோ தவறாக நடக்கிறது, தயவுசெய்து என்னை கேப்டன் சாஹிப்பிடம் சந்திக்க வையுங்கள்” எனக் கதறிய அந்தப் பெண்ணை, எஸ்பி-யின் மக்கள் தொடர்பு அதிகாரி உள்ளே சென்று அதிகாரியைச் சந்திக்க அனுமதிக்காமல் தடுத்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் சாமானிய மக்கள் தங்களுக்குரிய நீதியைப் பெறுவதற்குக் கதவு கதவாக அலைந்து, தங்கள் உயிரையே பணையம் வைக்க வேண்டிய அவல நிலை நீடிப்பதாகப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நில ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக எஸ்பி அலுவலக வளாகத்தில் அந்தப் பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
