CINEMA
“எப்பா என்னா ஆட்டம்” யோகி பாபு பகிர்ந்த நகைசுவை வீடியோ…. குவியும் லைக்குகள்…!!
நகைச்சுவை நடிகரான யோகி பாபு மான் கராத்தே, யாமிருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்தில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் இவர் யானை ஒன்று உடலை அசைத்து, வளைத்து ஆட்டம் போடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் அதில், இந்தாண்டுக்கான சிறந்த நடன இயக்குநர் என நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.
முழு எனர்ஜியுடன் யானை போடும் இந்த ஆட்டம் இணையத்தில் வைரலான நிலையில் இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. “கடைசி விவசாயி” என்ற படத்தில் யானையுடன் யோகிபாபு நடித்திருந்தார். அதில் அவர் விவசாய நிலங்களை விற்று, யானையை வாங்கி அதைக் கொண்டு யாசகம் கேட்கும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
This year best choregrapher #elephant pic.twitter.com/tLb2g7ZcQ3
— Yogi Babu (@iYogiBabu) August 8, 2024