CINEMA
யோகிபாபு ஒரு காமெடி நடிகரே கிடையாது….. பரபரப்பு குற்றசாட்டை வைத்த முக்கிய பிரபலம்…!!
நகைச்சுவை நடிகர் யோகி பாபு, தமிழ் சினிமாவில் இவர் அ றிமுகம் ஆன முதல் படம் இயக்குனர் அமீர் ஹீரோவாக நடித்த “யோகி” படத்தில் தான். இன்று யோகிபாபு தவிர்க்கமுடியாத நகைச்சுவை நடிகர்கள் இடத்தில் தமிழ் சினிமாவில் இருக்கிறார். இன்று தமிழில் முன்னணி நடிகை ஆன நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்தில் டூயட் சாங் பாடும் அளவிற்கு தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர் ஆகிவிட்டார்.
இப்போதெல்லாம் ஒரு கதை எழுதும் போதே யோகிபாபு இந்த இடத்தில் என்ன கவுண்டர் கொடுப்பார் என்று யோசித்து இயக்குனர்கள் கதை எழுதும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார் என்றே சொல்லலாம். இந்நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி இவர் குறித்து பேசுகையில், யோகிபாபு ஓர் காமெடி நடிகர் கிடையாது. அவர் தன்னுடைய பரட்டை தலையை வைத்து மக்களை சிரிக்க வைக்கலாம் என்று நம்பி வந்தவர் என்று குற்றசாட்டை வைத்துள்ளார்.