CINEMA
பிக்பாஸ்-8 இல் களமிறங்கும் பிரபல காமெடி நடிகர்…? காமெடிக்கு பஞ்சமில்லை…. லீக்கான தகவல்…!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாதம் பிக்பாஸ் 8 தொடங்கயிருக்கும் நிலையில் அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் விஜய் டிவி தீவிரமாக இறங்கி உள்ளது. இந்த சீசனில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வழக்கமாக பிக் பாஸ் என்றால் இளம் வயதில் இருப்பவர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை பல பிரபலங்கள் போட்டியாளர்களாக வருவார்கள். அந்த விதத்தில் காமெடி நடிகர் செந்தில் போட்டியாளராக வர இருப்பதாக கூறப்படுகிறது. அவர் வந்தால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என இணையவாசிகள் கூறி வருகின்றனர். செந்தில் பிக் பாஸ் வருவாரா? இல்லையா? என்பதை ஷோ தொடங்கும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.