CINEMA
“அது நடக்காது” விஜய் தொடர்ந்து சினிமாவில் நடிப்பார்… காரணத்தை அடிச்சி சொன்ன பிரபலம்….!!!
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அடுத்த 2026 தேர்தலில் போட்டியிடவுள்ளார். இதனையடுத்து இனி சினிமாவில் நடிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளார். மேலும் விக்கிரவாண்டியில் தவெக மாநாடு அக். 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் விஜய் ரசிகர்களும் சரி, தொண்டர்களும் சரி பெரும் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் முக்கிய பிரபலங்கள் பலரும் எதிர்மறை மற்றும் நேர்மறையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்தவகையில் வலைப்பேச்சு அந்தணன், என்னை பொருத்தவரை விஜய் தொடர்ந்து சினிமாவில் நடிப்பார். கரணம் என்னவென்றால் அவர் 2026 இல் நிச்சயமாக முதல்வராக முடியாது என்பது என்னுடைய கருத்து. அவர் முதல்வராகிவிடலாம் என்ற எண்ணத்தில் தான் சினிமாவை இனி நடிக்க மாட்டேன் என்று அறிவித்தார் என்று கூறியுள்ளார்.