அடக்கடவுளே..! 9 நாள் விரதத்திற்குப் பின் நேர்ந்த சோகம்.. ஐஸ்கிரீம், சௌமீன் சாப்பிட்ட 12 வயது சிறுமி பரிதாப பலி… குடும்பத்தினர் கண்ணீர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கடவுளே..! 9 நாள் விரதத்திற்குப் பின் நேர்ந்த சோகம்.. ஐஸ்கிரீம், சௌமீன் சாப்பிட்ட 12 வயது சிறுமி பரிதாப பலி… குடும்பத்தினர் கண்ணீர்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஏடா பகுதியில், 9 நாட்கள் நவராத்திரி விரதம் இருந்த 12 வயது சிறுமி, சௌமீன் சாப்பிட்டபோது ஏற்பட்ட மூச்சுத்திணறல் மற்றும் வாந்தி காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த திங்கள்கிழமை மதியம் 12 மணியளவில், அந்தச் சிறுமி தனது குடும்பத்தினருடன் காஸ்கஞ்ச் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சாமுண்டா தேவி கோயிலுக்குத் தரிசனத்திற்காகச் சென்றுள்ளார்.

கோயில் தரிசனத்தை முடித்த பிறகு, மதியம் 3:30 மணியளவில் அங்கிருந்த கண்காட்சித் திடலில் சிறுமி ஐஸ்கிரீம் மற்றும் சௌமீன் ஆகியவற்றை ஆவலோடு சாப்பிட்டுள்ளார். அதன் பின்னர், மாலை 4 மணியளவில் குடும்பத்தினருடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, சிறுமிக்குத் திடீரென கடுமையான வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததைக் கண்டு பதறிய குடும்பத்தினர், அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். ஒன்பது நாட்கள் தொடர் விரதத்திற்குப் பின் உணவுக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு இந்த சோகத்திற்கு வழிவகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in