LATEST NEWS
சனி வக்ர பெயர்ச்சி 2026: அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ‘அந்த’ ராசிகள்… உங்கள் ராசியும் இதில் இருக்கா..??
ஜோதிடத்தில் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாகக் கருதப்படும் சனிபகவான், 2026-ஆம் ஆண்டு ஜூலை 27 முதல் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்குகிறார். இந்த வக்ர பெயர்ச்சியானது தொழில், நிதி, குடும்பம் மற்றும் தனிப்பட்ட முன்னேற்றம் என மனித வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், ஆண்டின் முக்கியமான கிரக மாற்றங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது என்றும் ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, இந்த காலகட்டத்தில் சனிபகவானின் தாக்கம் அதிகரித்து சில ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக அமையவுள்ளது.
இந்த சனி வக்ர பெயர்ச்சியால் முதன்மையாகப் பலன் பெறப்போகும் ராசி ரிஷபம் ஆகும். சனி பகவான் இவர்களின் லாப ஸ்தானத்தில் அமர்வதால், இவர்களின் நிதி நிலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அபார வளர்ச்சியடையும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைப்பதுடன், தொழிலை புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தவும் முடியும். மேலும், அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும், குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், நீண்ட நாட்களாகத் திட்டமிட்ட பயணங்களும் சாத்தியமாகும்.
அடுத்ததாக, மிதுனம் மற்றும் துலாம் ஆகிய ராசிக்காரர்களுக்கும் இந்த வக்ர பெயர்ச்சி பெரும் அதிர்ஷ்டத்தைத் தரவுள்ளது. மிதுன ராசிக்காரர்களுக்குத் தன்னம்பிக்கையும் துணிச்சலும் அதிகரித்து, செய்யும் வேலைகளில் பெரும் லாபமும் வெற்றியும் கிடைக்கும்; வேலை மாற்றம் மற்றும் வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இது சாதகமான காலம். துலாம் ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த பணப் பிரச்சினைகள் மற்றும் கடன் தொல்லைகள் முடிவுக்கு வரும் வகையில் திருப்திகரமான பணவரவு இருக்கும், மேலும் தம்பதியினருக்கு இடையே இருந்த குடும்பச் சிக்கல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும்.
