எஸ்பிபி-யை தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி… அதிர்ச்சியில் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

எஸ்பிபி-யை தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி… அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Published

on

தமிழ் சினிமாவின் மிக பெரிய படகராக கருதப்படுபவர் எஸ்.பி.பி. இவர் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை. அந்த அளவிற்கு பேர் புகழை கொண்ட இவருக்கு கடந்த வாரம் கொரொனா தொற்று ஏற்பட்டது, இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகினர்.

 

Advertisement

எஸ்.பி.பி தொடர்ந்து பிரபல பின்னணி பாடகியான சுனிதா உபத்ரஷ்தா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுவிட்டதாக அறிவித்துள்ளார். தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் அதிகளவான பாடல்களை பாடியுள்ளவர் சுனிதா. இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், எனது உடல்நிலை குறித்து ஏராளமான அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன, உங்கள் அனைவருக்கும் நன்றி.

சில தினங்களுக்கு முன்னர் எனக்கு கொரோனா தொற்று உறுதியானது, தலைவலித்ததால் அலட்சியம் செய்யாமல் பரிசோதனை செய்தேன், இதில் தான் தொற்று தெரியவந்தது. தற்போது நான் குணமடைந்துவிட்டேன், ஆரோக்கியமாகவும் இருக்கிறேன், மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். எஸ்பிபி அவர்களின் உடல்நிலை குறித்து கவலையடைகிறேன், அவர் விரைவில் குணமடைய நானும் எனது குடும்பத்தினரும் பிரார்த்தனை செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in