CRIME
சந்தைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… மயக்க நிலையில் மீட்கப்பட்ட அவலம்… காம மிருகங்கள் இருவர் கைது..! நடந்தது என்ன..?!
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம், சார்ரா நகரியப் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் பொருட்கள் வாங்குவதற்காக அண்மையில் சந்தைக்குச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அச்சிறுமி வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், அவரைப் பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததைத் தொடர்ந்து, இது குறித்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், உள்ளூர் பொதுமக்களின் உதவியுடன் சிறுமியைத் தீவிரமாகத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு வெறிச்சோடிய பகுதியில், அச்சிறுமி சுயநினைவின்றி மயங்கிய நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த இடத்திற்கு அருகே மதுபோதையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உலவிக்கொண்டிருந்த இரண்டு நபர்களை போலீசார் உடனடியாகப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், அந்த இரு நபர்களும் சேர்ந்து சந்தைக்கு வந்த சிறுமியின் மீது ஏதோ ஒரு ரசாயனத்தைத் தெளித்து அவரை மயக்கமடையச் செய்ததும், பின்னர் அந்த ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்குக் கொண்டு சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும் வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், குற்றவாளிகள் இருவர் மீதும் ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.
