CRIME
பகீர்..! கயிற்றைப் பிடித்துத் தப்ப முயன்ற புதுப்பெண்.. நள்ளிரவு 2 மணிக்கு 3-வது மாடியில் நடந்த பயங்கரம்.. திடுக்கிட வைக்கும் பின்னணி..!!
மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தில் உள்ள கரம்டி பகுதியில், ஒப்பந்தத்தின் அடிப்படையில் 45 வயது நபருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட பீகாரைச் சேர்ந்த 23 வயதுப் பெண் சந்தியா குமாரி, சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான 10 நாட்களிலேயே, ஜூலை 29 மற்றும் 30-ஆம் தேதிக்கு இடைப்பட்ட நள்ளிரவு 2 மணியளவில், வீட்டின் 3-வது மாடியில் இருந்து கயிற்றின் உதவியோடு கீழே இறங்கி தப்பிக்க முயன்றபோது கயிறு அறுந்து கான்கிரீட் தரையில் விழுந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கணவருக்கும் அவருக்கும் இடையே 22 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்ததால், கட்டாயத்தின் பேரிலேயே இந்தத் திருமணம் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இரவில் மனைவியைக் காணாமல் தேடிய கணவர் முகேஷ், வீட்டின் பின்புறம் இரத்தக் காயங்களுடன் கிடந்த சந்தியாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாடியில் கட்டப்பட்டிருந்த கயிற்றின் பாகங்களைக் கைப்பற்றிய காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பீகாரில் உள்ள பெண்ணின் வீட்டாருக்குத் தகவல் தெரிவித்தும் 48 மணி நேரமாக யாரும் வராததால், பிரேதப் பரிசோதனைக்குப் பின் சடலம் கணவரிடமே ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.
