டேய் என்னடா பண்ணுற..? வீட்டின் பெல் அடித்த அடுத்த நொடி.. பின்னால் இருந்து பாய்ந்த காமுகன்… புர்கா அணிந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

டேய் என்னடா பண்ணுற..? வீட்டின் பெல் அடித்த அடுத்த நொடி.. பின்னால் இருந்து பாய்ந்த காமுகன்… புர்கா அணிந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டம் கட்ஹர் காவல் எல்லைக்குட்பட்ட ரஹ்மத் நகர் கரூலா பகுதியில் கடந்த ஜூலை 28ஆம் தேதி மாலை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்மணி ஒருவர், மதியம் சந்தைக்குச் சென்றுவிட்டு பொருட்கள் வாங்கிக்கொண்டு மாலை 4 மணியளவில் தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அவர் கரூலா தெரு எண் 3-ல் உள்ள தனது வீட்டின் வாசலை வந்தடைந்து, கதவைத் தட்டிவிட்டு உள்ளே இருந்து யாராவது திறப்பார்களா என்று காத்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

அப்பொழுது அந்தத் தெரு மக்கள் நடமாட்டமின்றி ஆள்அரவமற்று இருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரு மர்ம ஆசாமி, அப்பெண்ணின் பின்னால் பதுங்கிப் பதுங்கி வந்துள்ளார். பெண்மணி கதவை நோக்கித் திரும்பி நின்றிருந்த அந்த நொடியில், அந்த காமுகன் திடீரென அப்பெண்ணைப் பின்னால் இருந்து மிகக் கொடூரமாகக் கட்டிப்பிடித்து பாலியல் ரீதியாக அத்துமீறி அநாகரிகமான செயலில் ஈடுபட்டுள்ளார். இதனால் நிலைதடுமாறிய அந்தப் பெண்மணி சற்றும் பயப்படாமல் உடனடியாகக் கூச்சலிட்டுச் சத்தம் போடவே, மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் அந்த மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.

Advertisement

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி உடனடியாகக் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை முராதாபாத் எஸ்பி சிட்டி குமார் ரண்விஜய் சிங் தலைமையிலான போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தபோது, அந்த காமுகனின் முகம் தெளிவாகப் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி, ‘முக்கேஷ் குமார்’ (வயது 28) என்ற அந்த வாலிபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இக்கொடூரச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in