நள்ளிரவில் நரவேட்டை பாணியில் மாந்த்ரீகம்… 9 நாய் குட்டிகளின் வாயைக் கட்டி நடந்த கொடூரம்… கர்நாடகாவை உறைய வைத்த செய்வினை வெறிக்கூத்து…!! – cinefeeds
Connect with us

CRIME

நள்ளிரவில் நரவேட்டை பாணியில் மாந்த்ரீகம்… 9 நாய் குட்டிகளின் வாயைக் கட்டி நடந்த கொடூரம்… கர்நாடகாவை உறைய வைத்த செய்வினை வெறிக்கூத்து…!!

Published

on

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சவனூர் தாலுகாவில் உள்ள மந்தாகனி, கலாசூர் மற்றும் கத்தீமத்தூர் கிராமங்களை இணைக்கும் முக்கியச் சாலைகளின் ஓரங்களில் 9-க்கும் மேற்பட்ட நாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலையில் தங்களது விவசாய நிலங்களுக்குச் சென்ற உள்ளூர் விவசாயிகள் இந்த நாய்களின் உடல்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். முதற்கட்ட விசாரணையின்படி, மூடநம்பிக்கை மற்றும் செய்வினை போன்ற பில்லி சூனியக் காரியங்களுக்காகவே இந்த வாயில்லா ஜீவன்கள் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மர்மமான முறையில் இறந்து கிடந்த இந்த நாய்களில் 5 பெண் நாய்களும், 4 ஆண் நாய்களும் அடங்கும். பலியிடப்பட்ட அனைத்து நாய்களின் வாய்களும் கயிறுகளால் மிகக் கொடூரமாக இறுக்கிக் கட்டப்பட்டிருந்தன. அதோடு, மாந்த்ரீகப் பூசையின் அடையாளமாக அவற்றின் உடல்கள் முழுவதும் குங்குமம் மற்றும் மஞ்சள் பூசப்பட்டு, அவற்றின் அருகில் கோழி இறக்கைகள் மற்றும் பூசைப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. வழக்கமாக கோழி அல்லது முட்டைகளை வைத்துத்தான் செய்வினை செய்வார்கள் என்று கேள்விப்பட்ட மக்களுக்கு, நாய்களைப் பலிகொடுத்து இத்தகைய கொடூரத் தந்திரப் பூசைகள் செய்யப்பட்டுள்ளது பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

முக்கிய விளைநிலங்களுக்குச் செல்லும் பாதைகளிலேயே இத்தகைய மாந்த்ரீகக் காரியங்கள் செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைக் குறித்துப் பெரும் பயத்தில் உள்ளனர். இந்த அமானுஷ்யக் காரியத்தை எந்த நோக்கத்திற்காக, யார் செய்தார்கள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நள்ளிரவில் நடமாடும் மர்ம நபர்களையும் மாந்த்ரீகர்களையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என உள்ளூர் காவல் துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in