LATEST NEWS
“இது வித்தியாசமான குதிரை பேரம்!”.. தவெக-வின் புதுவகை அரசியலைத் தோலுரித்த டாக்டர் கிருஷ்ணசாமி.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
தமிழகத்தில் மற்ற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளைக் கரைத்து, தமிழக வெற்றிக் கழகம் முற்றிலும் ஒரு வித்தியாசமான குதிரை பேர அரசியலில் ஈடுபட்டு வருவதாகப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சுய லாபத்திற்காகவும், புதிய பதவி மற்றும் பொறுப்புகளைக் கைப்பற்றுவதற்காகவுமே அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து விலகிப் பலரும் தவெகவில் இணைந்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் முறையான விசாரணை நிறைவு பெற்று தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் வரையில், தமிழகத்தில் எந்தவொரு இடைத்தேர்தலையும் தேர்தல் ஆணையம் நடத்தக் கூடாது என்று கிருஷ்ணசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதோடு, மக்கள் பிரதிநிதித்துவப் பதவிகளைத் துறந்துவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களைத் தமிழக ஆளுநர் நேரில் அழைத்து உரிய விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் அதிரடி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அவரின் இந்த அதிரடி அறிக்கை, தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது
