LATEST NEWS
மறைந்த நடிகர் முரளியின் டைரியில் எழுதியிருந்த தகவல்! மனைவி செய்த செயலால் நெகிழ்ச்சி… பதிவிட்ட பிரபலம்
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் முரளி. நடிகர் முரளி குறித்து பைனான்சியர் திருப்பூர் சுப்பிரமணியம் நெகிழ்ந்துபோய் சம்பவம் ஒன்றை பதிவிட்டுள்ளார், அதாவது நடிகர் முரளிக்கு டைரி எழுதும் பழக்கம் உண்டு. அதன் படி அவர் உயிரிழந்த பின்பு, அவருடைய டைரி மூலம் தன் கணவர் வைத்திருந்த கடனைத் தெரிந்து கொண்டுள்ளார் ஷோபா. இதில் பைனான்சியர் திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு 17 லட்ச ரூபாய் கடன் கொடுக்க வேண்டும் என இருந்துள்ளது.
அதில் மனிதாபிமானத்துடன் முரளி இறந்தவுடன், தன்னிடம் இருந்த பத்திரங்கள் அனைத்தையும் கிழித்துப் போட்டுவிட்டார் திருப்பூர் சுப்பிரமணியம். சில நாட்கள் கழித்து, திருப்பூர் சுப்பிரமணியத்திடம் தொலைபேசியில் பேசிய ஷோபா, அவரை வீட்டுக்கு அழைத்துள்ளார். அவர் வீட்டுக்குச் சென்றவுடன், முரளியின் மனைவி ஷோபா 17 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார். நான் பணமே கேட்கவில்லையே. அவர் கொடுத்த பத்திரங்களைக் கூட கிழித்துப் போட்டுவிட்டேன் என்று கூறியிருக்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.
அவருடைய சம்பாத்தியத்தில் வாங்கிய இடத்தை விற்று, அவர் கடன் வாங்கிய ஆட்களுக்குக் கொடுக்கிறேன். தன் கணவர் யாருக்கும் கடனாளியாகச் சென்றுவிடக் கூடாது என்பது என் எண்ணம் என்று கூறியுள்ளார். மேலும், அதர்வாவை அழைத்து இவன் நாயகனாக நடிக்கவுள்ளான் ஆசீர்வாதம் பண்ணுங்கள் என்று கூறியிருக்கிறார். அப்போது திருப்பூர் சுப்பிரமணியத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார் அதர்வா என்பது குறிப்பிடத்தக்கது.
