“20 வருட கண்ணீர்.. நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்..! காம ஆசிரியரின் கொடூர முகத்தை கிழித்த முன்னாள் மாணவி..! நீதிமன்றத்தில் வெளியான அதிரடி தீர்ப்பு..!! – cinefeeds
Connect with us

CRIME

“20 வருட கண்ணீர்.. நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்..! காம ஆசிரியரின் கொடூர முகத்தை கிழித்த முன்னாள் மாணவி..! நீதிமன்றத்தில் வெளியான அதிரடி தீர்ப்பு..!!

Published

on

கடந்த 2006 மற்றும் 2009-ம் ஆண்டுகளுக்கு இடையில், பிரிட்டனின் சால்ஃபோர்ட் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய கேரி டே-டேவிஸ் (55) என்பவர், தனது பள்ளி மாணவிக்குக் கூடுதல் பயிற்சி அளிப்பதாகக் கூறி ஆசை வார்த்தைகள் பேசி தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு அந்த சிறுமிக்கு போதைப்பொருட்களையும் மதுவையும் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தத் துஷ்பிரயோகம் இதோடு நின்றுவிடாமல், பள்ளி நூலகத்திலும் மற்றும் வகுப்பறையில் உள்ள சேமிப்பு அலமாரியிலும் தொடர்ந்து நீடித்துள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த மாணவி, பல ஆண்டுகள் கடந்து தைரியமாக முன்வந்து கடந்த 2022-ஆம் ஆண்டு கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஆசிரியர் தொடர்ந்து மறுத்து வந்ததோடு, அந்தப் பெண் தன் மீது ஏதோ ஒரு “மனக்கசப்பு அல்லது பகை” கொண்டு பழிவாங்குகிறார் என்று வாதிட்டார். எனினும், லிவர்பூல் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் மூன்று பாலியல் பலாத்காரக் குற்றங்கள் உட்பட பல பிரிவுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Advertisement

இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு பேசிய பாதிக்கப்பட்ட பெண், கடந்த 20 ஆண்டுகளாக தான் அனுபவித்து வந்த மன உளைச்சலும் பயமும் நீங்கி, தற்போது தன் தோள்களிலிருந்து ஒரு பெரும் சுமை இறங்கியது போல் உணர்வதாகவும், தனக்கு நீதி கிடைத்துள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு குறித்துப் பேசிய குற்றப் புலனாய்வுத் துறையின் ஆய்வாளர் டேவ் ஓக்டன், ஆசிரியர் தனது அதிகாரத்தையும் மாணவியின் இளம் வயதையும் சாதகமாகப் பயன்படுத்தி இந்த கொடூரத்தைச் செய்துள்ளார் என்றும், பாலியல் துன்புறுத்தல்களைப் புகார் செய்வதற்கு காலம் ஒரு தடையல்ல, எவ்வளவு காலம் கழித்துப் புகார் அளித்தாலும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in