LATEST NEWS
திருமணநாள் கொண்டாடிய நடிகை ரோஜா.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கும் குடும்பம்! வைரலாகும் புகைப்படம்..
ஆர்.கே.செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதன்பின்னர் முன்னணி நடிகையாக அவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் நடித்தார். சூரியன், வீரா, ஆயுதா பூஜை, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா போன்ற படங்களில் நடித்தது பாராட்டப்பட்டது. விக்ரமன் இயக்கிய உன்னிடத்தில் என்னாய் கொடுத்தேன் படம் திருப்புமுனையாக அமைந்தது.
தற்போது அவர் ஒய்.எஸ்.ஆர்.சி.பி மாநில மகளிர் தலைவராக பணியாற்றி வருகிறார். அவர் 2019 தேர்தலில் நகரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் ஏபிஐசி தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் மனைவியும், ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா-செல்வமணி தம்பதியினரின். 19 வது திருமண நாள் இன்று கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு ரோஜா, செல்வமணி தம்பதியை நேரில் அழைத்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இருவருக்கும் மலர் தூவி வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பின்போது ரோஜா-செல்வமணியின் மகள், மகன் ஆகியோர்களும் இருந்துள்ளனர். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, நடிகை ரோஜா தலையில் கை வைத்து ஆசிபெறும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
