LATEST NEWS
ரஜினிகாந்த் மகள் எவ்வளவு கொதித்தார் தெரியுமா….?
கொரோனா நிவாரண நிதியாக ரூ 1 கோடி கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்! நடிகர் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா கொரோனா நிவாரண நிதியாக ரூ 1 கோடி வழங்கியுள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் வாட்டி எடுத்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து பொதுமக்கள், தொழிலதிபர்கள், சமூக அமைப்புகள் என பலர் கொரோனா நிவாரண பணிக்காக நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக தனது கணவரின் மருந்து நிறுவனம் சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலையை தமிழக முதல்வர் முக ஸ்டாலினிடம் வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
ஏற்கனவே நடிகர்கள் அஜித், சூர்யா, கார்த்தி ஆகியோர் கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
