LATEST NEWS
“தடுப்பூசி போட்ட சில மணி நேரத்தில் 10 மாத குழந்தை பலி” அலட்சியத்தால் நேர்ந்த கொடூரம்..? மருத்துவமனை முன் பெற்றோர் உடலை வாங்க மறுத்து அதிரடி போராட்டம்..!!
கோவை வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 10 மாத பெண் குழந்தை கனிஷ்கா ஸ்ரீ உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே குழந்தைக்கு திடீரென உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
குழந்தையின் இந்த எதிர்பாராத உயிரிழப்புக்கு அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் தவறான சிகிச்சையே முக்கியக் காரணம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், நியாயம் கேட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு திரண்டு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடுப்பூசி செலுத்திய பிறகு ஏற்பட்ட இந்த அசம்பாவிதம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் என்ன என்பதை அறிய பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
