VIDEOS
நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத்தை கண்கலங்க வைத்த நபர்… அரங்கமே கண்ணீரில் மூழ்கிய வீடியோ..!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சிக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதற்கு முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் தான். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
வார வாரம் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அதன்படி இந்த வாரம் இளையராஜா பாடலை ரசிக்கும் 80 களில்பிறந்த நபர்கள் மற்றும் தற்போது இளைஞர்களாக இருக்கும் நபர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையற்ற நபர் தன்னுடைய சோகத்தை வெளிப்படுத்தி பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதனைக் கேட்ட கோபிநாத் கண்கலங்கியதோடு அரங்கத்தில் இருந்த அனைவருமே கண்ணீரில் மூழ்கினர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://youtu.be/lTN_VZDZFTE
https://youtu.be/_5kto5Dln3c
