LATEST NEWS
மனிதாபிமானம் எங்கே போனது…? மத்திய பிரதேசத்தில் இறந்த பசுவை குப்பை வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்… வைரல் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..!!!
மத்தியப் பிரதேச மாநிலம் குணாமாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், இறந்த பசு மாடு ஒன்றை குப்பை அள்ளும் வாகனத்தில் கயிற்றால் கட்டி, தார்ச்சாலையில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு கொடூரமாக இழுத்துச் சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது. வாயில்லா ஜீவன் என்றும், இந்து மதத்தில் புனிதமாகவும் கருதப்படும் பசுவிற்கு, இறந்த பின்னும் கூட முறையான கண்ணியம் அளிக்கப்படாமல் குப்பை வாகனத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூரமான செயலை அங்கிருந்த சிலர் தங்களது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியதோடு, கடுமையான பொதுமக்களின் அக்ரோஷத்தையும் ஈர்த்தது. “இறப்பிற்குப் பின்னும் ஒரு உயிருக்குக் குறைந்தபட்ச கண்ணியம் கூட வழங்கப்படாதா?” எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கண்டனங்களை மிகவும் ஆக்ரோஷமாகப் பதிவு செய்து வருகின்றனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறை உடனடியாகச் செயல்பட்டனர். புனிதமான விலங்கிற்கு அவமதிப்பு ஏற்படுத்தியதாகவும், விலங்கு வதை தடுப்புச் சட்டங்களின் கீழும் குப்பை வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் மற்றும் அதற்குப் பொறுப்பான நகராட்சி ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த அலட்சியப் போக்கிற்கு காரணமானவர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உள்ளூர் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
