LATEST NEWS
நெஞ்சை பதறவைக்கும் வீடியோ! முதியவரை ஒற்றைக் கொம்பால் தூக்கி காற்றில் வீசிய வெறிபிடித்த காளை.. பார்த்தாலே நடுங்குது..!!
உத்தரப் பிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான நைமிசாரண்யாவில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவரை பின்னாலிருந்து வந்த வெறிபிடித்த ஒரு காளை மாடு திடீரென முட்டி காற்றில் தூக்கி வீசியது. பார்ப்போரைக் பதறவைக்கும் இந்த கொடூரமான காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த எதிர்பாராத தாக்குதலில் அந்த முதியவர் காற்றில் பல அடி உயரம் தூக்கி வீசப்பட்டு, சாலையில் பலத்த காயங்களுடன் விழுந்தார். அவரைத் தடுத்துக் காப்பாற்ற முயன்ற மேலும் இரண்டு நபர்களையும் அந்த காளை மாடு அச்சுறுத்தித் தாக்கியது. இச்சம்பவத்தில் முதியவர் உட்பட மொத்தம் மூன்று பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
https://twitter.com/i/status/2071604438662586489
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நைமிசாரண்யா போன்ற பிரசித்தி பெற்ற புனிதத் தலங்களில் சுற்றித் திரியும் ஆதரவற்ற கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதனால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தெருக்களில் சுற்றும் மாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
