LATEST NEWS
சினிமா பாணி கிளைமாக்ஸ்… நிஜத்தில் நடந்த அதிசயம்…! காபி டேபிளில் மோதிய தலை… 13 ஆண்டுகளுக்குப் பின் பார்வை திரும்பிய பெண்…!வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்..!!!
நியூசிலாந்தைச் சேர்ந்த லிசா ரீட் என்ற பெண்மணிக்கு நடந்த ஒரு உண்மைச் சம்பவம் மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. லிசாவிற்கு 11 வயதாக இருக்கும்போது அவரது மூளையில் ஒரு கட்டி ஏற்பட்டது. இந்த கட்டி அவரது பார்வையைப் பறிக்கும் நரம்புகளைக் கடுமையாக அழுத்தியதால், அவர் தனது பார்வைத்திறனை முழுமையாக இழந்தார். இதனால் கடந்த 13 ஆண்டுகளாக அவர் முற்றிலும் பார்வையற்றவராக, தனது அன்றாடத் தேவைகளுக்கு ஒரு வழிகாட்டி நாயையே நம்பி வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2000-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு நாள் இரவு, தூங்குவதற்கு முன்பாக லிசா தனது செல்ல நாய்க்கு முத்தம் கொடுத்து ‘குட் நைட்’ சொல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடலின் சமநிலை தவறியதால், அங்கிருந்த காபி மேஜையின் மீது அவரது தலை பலமாக மோதியது. தலையில் ஏற்பட்ட வலியுடன் அன்றிரவு தூங்கச் சென்ற லிசா, அடுத்த நாள் காலை கண் விழித்துப் பார்த்தபோது ஒரு பெரும் அதிசயம் காத்திருந்தது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கண்கள் மங்கலாக இருந்தாலும், எதிரே இருக்கும் பொருட்களைப் பார்க்கும் திறனை மீண்டும் பெற்றிருந்தன.
https://www.instagram.com/p/DaLXIpuNEYX/?utm_source=ig_web_button_share_sheet
இந்த விசித்திரமான சம்பவத்திற்கு மருத்துவர்களிடம் தெளிவான அறிவியல் விளக்கம் இல்லை என்றாலும், மேஜையில் பலமாக அடிபட்ட அதிர்வில் மூளையில் இருந்த கட்டி சற்று நகர்ந்திருக்கலாம் என்றும், இதனால் அழுத்தப்பட்டிருந்த கண் நரம்புகள் விடுவிக்கப்பட்டு அவருக்கு மீண்டும் பார்வை கிடைத்திருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த விபத்தின் மூலம் லிசாவிற்கு ஒரு கண்ணில் சுமார் 80 சதவீத பார்வை திரும்பக் கிடைத்தது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகத் தனது பெற்றோரின் முகத்தைக் கண்ட லிசாவின் இந்த நெகிழ்ச்சியான கதை, தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
