2 வருஷமா குழந்தை இல்லை… நீண்ட நேரம் திறக்கப்படாத கதவு… 27 வயது ராஜேஸ்வரி எடுத்த கொடூர முடிவு.. கதறும் உறவினர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

2 வருஷமா குழந்தை இல்லை… நீண்ட நேரம் திறக்கப்படாத கதவு… 27 வயது ராஜேஸ்வரி எடுத்த கொடூர முடிவு.. கதறும் உறவினர்கள்..!!

Published

on

நாகர்கோவிலைச் சேர்ந்த 27 வயது பெண் விக்னேஸ்வரி, கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்குத் திருமணமாகி நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் விக்னேஸ்வரி கடந்த சில காலமாகவே கடுமையான மனவருத்தத்திலும், மன உளைச்சலிலும் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திய விக்னேஸ்வரி, விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய அவரது மாமனார் சந்திரன், கதவு பூட்டப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். தூக்கில் தொங்கிய விக்னேஸ்வரியை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in