LATEST NEWS
கிரிமினல் நடவடிக்கையில் சிக்கிய நயன் – விக்கி… மொத்த சொத்தையும் ஆட்டைய போட்ட விக்னேஷ் சிவன் தந்தை…?
தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. 40 வயதை எட்டி உள்ள நயன்தாராவிற்கு இன்று வரை கோலிவுட்டில் மார்க்கெட் குறையாமல் உள்ளது. அதேசமயம் எந்த திரைப்படமாக இருந்தாலும் நயன்தாராவின் மனதிற்கு எட்டிய திரைப்படங்களில் மட்டுமே அவர் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அதன்படி நானும் ரௌடி தான் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த அவர் அந்த திரைப்படத்தில் இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். ஒரு பக்கம் குடும்பம், மறுபக்கம் குழந்தைகள், சினிமா மற்றும் பிசினஸ் என அனைத்திலும் நயன்தாரா கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்நிலையில் நயன்தாராவின் மாமனாரும் விக்னேஷ் சிவனின் தந்தையுமான சிவக்கொழுந்து மீது லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் சொத்துக்களை அபகரித்ததாக கூறி அதற்கான ஆதாரங்களையும் கொடுத்துள்ளனர்.
இந்த புகாரைத் தொடர்ந்து தாய் மீனா குமாரி, சகோதரி ஐஸ்வர்யா, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீஸ் விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிகிறது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் குறித்து இவ்வாறு வெளியாகி உள்ள தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
