ஏ.ஆர்.ரகுமானின் “ஒத்த வரியை கேட்டு தற்கொலை எண்ணத்தை கைவிட்ட நபர்”… கலங்க வைக்கும் சம்பவம்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஏ.ஆர்.ரகுமானின் “ஒத்த வரியை கேட்டு தற்கொலை எண்ணத்தை கைவிட்ட நபர்”… கலங்க வைக்கும் சம்பவம்..!!!

Published

on

இந்திய அளவில் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ ஆர் ரகுமான்.  இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையால் ஒருவர் தற்கொலை முடிவை கைவிட்ட சம்பவம் நடந்துள்ளது. அதாவது மலேசியாவை சேர்ந்த செல்வகுமார் என்ற இசை கலைஞர் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். அப்போது அவருக்கு நண்பர் ஒருவர் மெசேஜ் அனுப்பி ஏ ஆர் ரகுமானின் இந்த பாடலை கேளுங்க கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்று கூறி ஓகே கண்மணி படத்தின் பாடல்களை அனுப்பியுள்ளார்.

அதில் நானே வருகிறேன் என்ற பாடலில் வரும் பொல்லாத என் இதயம் என்ற வரிகளை கேட்டதும் செல்வகுமாரின் மனம் மாறி உள்ளது. அதன் பிறகு ஹெட் போனை மாட்டிக் கொண்டு அந்த பாடலை 48 மணி நேரம் திரும்பத் திரும்ப கேட்டுள்ளார். சாகக்கூடிய இடத்தில் தான் இல்லை என்பதை உணர்ந்து பிறகு தனது வாழ்க்கையை மாற்றிக் கொண்டார்.

Advertisement

ஒரு பாடல் மூலம் தன்னுடைய வாழ்க்கையை மீட்டெடுத்ததற்கு நன்றி குருவே என அந்த நபர் ஏ ஆர் ரகுமானை ட்விட்டரில் டேக் செய்து பதிவிட்டுள்ள நிலையில் அந்தப் பதிவுக்கு ஏ ஆர் ரகுமான் பதில் அளித்துள்ளார். மேலும் அந்த நபர் ஏ ஆர் ரகுமான் என தனது கையில்பச்சை குத்தியுள்ள நிலையில் அந்த பதிவு வைரலாகி வருகிறது.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in