71 வயசிலும் இளம் நடிகைகளுடன் ஜோடி போடும் மம்மூட்டி… அப்போ ரம்யா பாண்டியன் இப்போ யார் தெரியுமா…?? – cinefeeds
Connect with us

LATEST NEWS

71 வயசிலும் இளம் நடிகைகளுடன் ஜோடி போடும் மம்மூட்டி… அப்போ ரம்யா பாண்டியன் இப்போ யார் தெரியுமா…??

Published

on

மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் மம்முட்டி 21 வயது ஆகும் நிலையில் இன்றும் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவரின் மகன் துல்கர் சல்மானே வருடத்திற்கு ஒரு படம் நடித்து வரும் நிலையில் மம்முட்டி வருடத்திற்கு ஐந்து படங்கள் வரை ரிலீஸ் செய்து வருகிறார். அதே சமயம் எந்த ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தாலும் அதில் இளம் நடிகைகள் தான் அவருக்கு ஜோடி சேர்கின்றனர்.

அதாவது லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் என்ற திரைப்படத்தில் ரம்யா பாண்டியன் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்ததாக ஜோதிகாவுடன் மம்முட்டி காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த வருடம் இறுதிக்குள் அந்த காதல் திரைப்படம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

இந்நிலையில் மம்முட்டியின் அடுத்த திரைப்படத்தில் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன் நடிக்க உள்ளதாக அவரே மம்முட்டியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அறிவித்துள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் 71 வயதிலும் மனுஷன் இளம் நடிகைகளுடன் ஜோடி போட்டு என்னம்மா நடிக்கிறார் என கூறி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in