LATEST NEWS
80s நடிகர் மோகனின் “ஹரா”படத்தில்… 93 வயதில் வில்லனாக களமிறங்கும் கமல்ஹாசன் சகோதரர்… வெளியான புகைப்படங்கள்..!!
பிரபல இயக்குனர் விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஹரா. இந்த திரைப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் நடிக்கின்றார்.
அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் குஷ்பூ, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மைக் கோபி மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் சுரேஷ் மோகன் நடிக்க அரசியல்வாதியாக வனிதா விஜயகுமார் நடிக்கின்றார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் சமூகப் பொறுப்பு மிக்க தானாக சாருஹாசன் நடிக்கின்றார்.
93 வயதாகும் இவர் சிறிதும் தோய்வில்லாமல் தன்னுடைய காட்சிகளை சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளதாக இயக்குனர் விஜய் ஸ்ரீஜி தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாருஹாசன் நாயகனாக நடித்த தாதா 87 திரைப்படத்தை விஜய் ஸ்ரீஜி இயக்கியது குறிப்பிடத்தக்கது.
