“கதவு திறந்தே இருக்கு, உள்ளே போ..!” ஜிம் ட்ரெய்னருடன் சேர்ந்து மனைவி போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. தூக்கத்தில் கணவனுக்கு நடந்த கொடூரம்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“கதவு திறந்தே இருக்கு, உள்ளே போ..!” ஜிம் ட்ரெய்னருடன் சேர்ந்து மனைவி போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. தூக்கத்தில் கணவனுக்கு நடந்த கொடூரம்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஜிம் ட்ரெய்னருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ய முயன்ற அஞ்சலக பெண் ஊழியரும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சல் துறையில் மூத்த கணக்காளராகப் பணிபுரியும் சஷாங்க் என்பவரது மனைவி பிரியா, கடந்த சில காலமாகத் தன் கணவரிடம் அனுமதி பெற்று ஜிம்மிற்குச் செல்லத் தொடங்கியுள்ளார். அங்கு அவருக்கும், ஜிம் ட்ரெய்னருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் விவகாரம் கணவருக்குத் தெரியவந்த நிலையில், சஷாங்க் தனது குடும்பத்துடன் டெல்லியிலுள்ள புதிய வீட்டிற்கு மாறத் திட்டமிட்டுள்ளார். இதனால் தங்களது காதலுக்குத் இடையூறாக இருக்கும் கணவரை வழியிலிருந்து அகற்ற பிரியாவும், அவரது காதலனும் சேர்ந்து ஒரு கொடூரமான கொலைத் திட்டத்தைத் தீட்டியுள்ளனர்.

திட்டமிட்டபடி கடந்த அக்டோபர் 26 அன்று அதிகாலை 5:30 மணியளவில், பிரியா வீட்டின் கதவைத் திறந்து வைத்தபடியே ஜிம்மிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் சென்ற அடுத்த இரண்டு நிமிடங்களில், கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்த காதலன், அசந்து தூங்கிக் கொண்டிருந்த சஷாங்கைக் கொடூரமாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சஷாங்க் அலறியடித்தபடி ரத்த வெள்ளத்தில் வீட்டிற்கு வெளியே ஓடிவந்த நிலையில், அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினரும், பாதுகாப்பு காவலரும் கொலையாளியை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையெடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் சஷாங்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் சூழலில், கொலை முயற்சியில் ஈடுபட்ட ஜிம் ட்ரெய்னர் மற்றும் மனைவி பிரியா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in