CRIME
“விளையாட்டுக்குத்தான் அனுப்பினேன்..!” 15 வயது மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய எச்.எம்… அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து வெளுத்து வாங்கிய தாய்.. வைரல் வீடியோ..!!
மலேசியாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் தனது 15 வயது மாணவிக்கு அனுப்பிய ஆபாசமான குறுஞ்செய்திகள், அவரது வாழ்நாள் நற்பெயரையும் பதவியையும் வெறும் 14 வினாடிகளில் தரைமட்டமாக்கியுள்ளது. அந்த மாணவியின் தாய் இதனைத் தற்செயலாகக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, நேரடியாகப் பள்ளி நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று தலைமை ஆசிரியரைச் சந்தித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது அந்தத் தலைமை ஆசிரியர், பதற்றத்தைக் குறைப்பதற்காக அது வெறும் விளையாட்டுக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திதான் என்று கூறி மலிவான முறையில் மழுப்ப முயன்றுள்ளார்.
தலைமை ஆசிரியரின் இந்த பொறுப்பற்ற பதிலால் கடும் ஆத்திரமடைந்த அந்த தாய், அலுவலகத்திற்குள்ளேயே அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். தலைமை ஆசிரியர் அவரிடம் மண்டியிட்டு கெஞ்சிய போதிலும், கோபம் தணியாத அந்த தாய் அவரைத் தொடர்ந்து தண்டித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் தலைமை ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் சட்டப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். அதற்குப் போட்டியாக, அந்தத் தலைமை ஆசிரியரும் தன்னைத் தாக்கியதாக அந்தத் தாய் மீது ஒரு எதிர் புகாரைப் பதிவு செய்துள்ளார்.
இந்த விவகாரத்தை விசாரித்த மலேசியக் கல்வித் துறை, அந்த தலைமை ஆசிரியரை உடனடியாகப் பள்ளியிலிருந்து நீக்காமல், வேறொரு இடத்திற்குப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. தனது மகள் வயதிலிருக்கும் ஒரு மாணவியிடம் தலைமை ஆசிரியர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி தவறாக நடக்க முயன்ற ஒருவருக்கு, கல்வித் துறை பணிநீக்கம் போன்ற கடுமையான தண்டனையை வழங்கியிருக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. ஆனால், அதற்கு மாறாக வெறும் பணியிட மாற்றம் செய்திருப்பது, இவரைப் போன்ற பலவீனமான குணம் கொண்ட மற்றவர்களுக்கும் தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
