அடக்கடவுளே.. அம்மா திட்டிய அந்த ஒரு வார்த்தை… 15 வயது சிறுமி எடுத்த அதிரடி முடிவு.. உறைபனிய வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கடவுளே.. அம்மா திட்டிய அந்த ஒரு வார்த்தை… 15 வயது சிறுமி எடுத்த அதிரடி முடிவு.. உறைபனிய வைக்கும் பின்னணி..!!

Published

on

ஹைதராபாத்தின் கோகாபேட் பகுதியில் உள்ள பிரெஸ்டீஜ் அடுக்குமாடி குடியிருப்பில், 15 வயதான லாஸ்யா லஹரி என்ற இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு மாணவி 23வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சோகமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீ சைதன்யா கல்லூரியில் படித்து வந்த அந்த மாணவி, படிப்பின் காரணமாக ஏற்பட்ட மனஅழுத்தத்தால் இந்த தீவிர முடிவை எடுத்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்லூரிக்குச் சென்று சரியாகப் படிக்குமாறு அவரது தாய் வற்புறுத்தியதாகவும், இதனால் மனமுடைந்த மாணவி குடியிருப்பின் 23வது மாடிக்குச் சென்று கீழே குதித்ததாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், மாணவியின் தற்கொலைக்கான அசல் காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in