“தினமும் குடிச்சிட்டு தான் வராரு..” தலைமை ஆசிரியரின் லீலைகளைப் போட்டுடைத்த பள்ளி மாணவர்கள்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“தினமும் குடிச்சிட்டு தான் வராரு..” தலைமை ஆசிரியரின் லீலைகளைப் போட்டுடைத்த பள்ளி மாணவர்கள்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!

Published

on

தெலங்கானா மாநிலம் கொமுரம் பீம் அசிஃபாபாத் மாவட்டம் திர்யானி மண்டலத்தில் உள்ள கம்பீரவுபேட்டா அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீநிவாஸ், பள்ளி வளாகத்திற்குள்ளேயே மது அருந்திய போது கிராம மக்களிடம் கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தலைமை ஆசிரியர் தினமும் மது குடித்துவிட்டுதான் பள்ளிக்கு வருகிறார் என்றும், போதையில் மாணவர்களிடம் முறையற்று நடந்து கொள்வதாகவும் அப்பள்ளி மாணவர்கள் ஏற்கனவே திடுக்கிடும் உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள், பள்ளிக்கு அதிரடியாகச் சென்று தலைமை ஆசிரியர் ஸ்ரீநிவாஸை மது பாட்டில்களுடன் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்

தலைமை ஆசிரியரின் இந்த அநாகரிகமான செயலால் கொதித்தெழுந்த கிராம மக்கள், அவரை உடனடியாகப் பள்ளியிலிருந்து முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். மேலும், இதுகுறித்து மண்டலக் கல்வி அதிகாரிக்கு (MEO) ஆதாரங்களுடன் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளனர் கல்வி புகட்டும் புனிதமான இடத்தில் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய தலைமை ஆசிரியரே இந்த நிலைமையில் பிடிபட்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாரைப் பெற்றுக் கொண்ட கல்வித் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in