CRIME
“நள்ளிரவில் கையில் குழந்தையுடன்” சைக்கிளில் சென்ற டெலிவரி பாய்… அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தையை கேட்டு கண்ணீர் விட்ட நபர்..!!
நள்ளிரவு 1 மணிக்கு மிதிவண்டியில் உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த ஒரு டெலிவரி பாயின் மடியில் இருந்த காட்சியைப் பார்த்தவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போயினர். அந்த வழியே காரில் சென்ற ஒருவர், மிதிவண்டியை நிறுத்தி, “சகோதரரே, இந்த நள்ளிரவு நேரத்தில் இந்த அப்பாவிப் பெண் குழந்தையை வைத்துக் கொண்டு ஏன் இப்படி அலைகிறீர்கள்?” என்று ஆச்சரியத்துடனும் கவலையுடனும் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த டெலிவரி பாய் புன்னகையுடன், “ஐயா, இது என் மகள். இவள் பிறந்த சில நிமிடங்களிலேயே இவளது தாய் இந்த உலகத்தை விட்டு பிரிந்துவிட்டாள். இவளை வீட்டில் தனியாக விட்டுவர எனக்கு மனமில்லை” என்று கூறியுள்ளார். மேலும், “நான் வேலைக்குச் செல்லாவிட்டால், என் செல்ல மகளின் பசியை எப்படிப் போக்குவது?” என்று அவர் கூறிய வார்த்தைகளைக் கேட்டதும், காரோட்டியின் கண்கள் கண்ணீரால் குலமாய் பெருகின.
தன் மகளின் பசியைப் போக்க அந்தத் தந்தை படும் அவஸ்தையும் அர்ப்பணிப்பும், ஒரு தந்தை தன் குழந்தைகளுக்காக எதையும் செய்யத் துணிவான் என்பதை உணர்த்துகிறது. தன் மகளின் எதிர்காலத்திற்காகவும், அவளது ஒருவேளை உணவிற்காகவும் தன்னைத்தானே வருத்திக்கொண்டு, இந்த உலகத்தையே எதிர்த்துப் போராடும் அந்தத் தந்தையின் பாசம் பார்ப்பவர் நெஞ்சங்களை உருக வைக்கிறது.
