“முதலில் 89% தங்கம்னு சொன்னாங்க, உருக்குனா..” நகைக் கடையில் கதறி அழுத பெண்.. நகைக் கடையில் நடந்த பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“முதலில் 89% தங்கம்னு சொன்னாங்க, உருக்குனா..” நகைக் கடையில் கதறி அழுத பெண்.. நகைக் கடையில் நடந்த பகீர் சம்பவம்..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு பெரிய நகைக் கடைக்கு, பெண் ஒருவர் தனது 40 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய நகைகளை மாற்றிவிட்டு புதிய நகைகளை வாங்குவதற்காகச் சென்றுள்ளார். அவர் கொண்டு வந்திருந்த பழைய கம்மல்களை பரிசோதித்த கடை ஊழியர்கள், ஆரம்பத்தில் அதில் 89 சதவீதம் தங்கம் இருப்பதாகக் கூறியுள்ளனர். எனினும், பழைய நகைகளை அப்படியே மாற்றிக் கொள்ள முடியாது என்றும், நகையை முழுமையாக உருக்கி ரவைகளாக மாற்றிய பின்னரே பரிசோதனை இயந்திரத்தில் அதன் துல்லியமான தூய்மைத் தன்மையை உறுதி செய்ய முடியும் என்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அந்தப் பழைய கம்மல்களை உருக்கிப் பரிசோதித்த போது, அதில் வெறும் 7 சதவீதம் மட்டுமே தங்கம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், “முதலில் 89 சதவீதம் என்று கூறிவிட்டு, இப்போது உருக்கிய பின் வெறும் 7 சதவீதம் தான் தங்கம் இருக்கிறது என்று கூறுகிறீர்களே” என அங்கேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அந்த பெரிய நகைக் கடையில் உரிமையாளர் இல்லாததாலும், அங்கிருந்த ஊழியர்களுக்குப் பாரம்பரிய நகைகள் குறித்த போதிய அனுபவ அறிவு இல்லாததாலும் இந்தத் தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

உண்மையில், பல ஆண்டுகளுக்கு முன்பு காரட் முறைகள் இல்லாத காலத்தில், பொற்கொல்லர்கள் ‘புந்தேலா’ என்ற வகை நகைகளைச் செய்துள்ளனர். இந்த நகைகளின் வெளிப்புறத் தோற்றத்தில் 89 சதவீதம் தங்கம் இருக்கும்படி, வெள்ளி அல்லது செம்பு உலோகத்தின் மீது தடிமனான தங்க முலாம் பூசி முழுத் தங்க நகை போல வடிவமைத்துள்ளனர். இதனால் வெளிப்புறப் பரப்பைச் சோதிக்கும் போது 89 சதவீதம் தங்கம் காட்டிய போதிலும், நகையை முழுமையாக உருக்கும் போது உள்ளே அதிகளவில் கலக்கப்பட்டிருந்த செம்பு உலோகம் வெளியில் தெரிந்து, தங்கத்தின் அளவு வெறும் 7 சதவீதமாகக் குறைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in