இந்த புகைப்படத்தில் இருக்கும் 90’ஸ் ரசிகர்களின் கனவுக்கன்னி யார் தெரியுமா?… அடடே இவரா?…. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த புகைப்படத்தில் இருக்கும் 90’ஸ் ரசிகர்களின் கனவுக்கன்னி யார் தெரியுமா?… அடடே இவரா?….

Published

on

தமிழ் சினிமா ரசிகர்கள் ‘புன்னகை இளவரசி’ என்று கொண்டாடப்படுபவர் நடிகை சினேகா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். பல ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ் திரையுலகில் ‘என்னவளே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடித்த முன்னணி நடிகையாக உயர்ந்தார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து  ‘அச்சம் உண்டு அச்சம் உண்டு’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.

Advertisement

அப்பொழுது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதைத்தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இன்று திரையுலகம் கொண்டாடும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஆத்யந்தா, விஹான் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு திரை வாழ்க்கை விட்டு சற்று விலகி இருந்த இவர்,  தற்பொழுது பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை சினேகா. தற்பொழுது இவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in