LATEST NEWS
போதும் ஆளவிடுங்கடா சாமி…! புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு சர்ச்சை…! குடும்பத்துடன் வெளிநாட்டில் நடிகர் பாபி சிம்ஹா…!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பாபி சிம்ஹா. இவர் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். இவர் ஜிகர்தண்டா என்ற திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி துணை நடிகருக்கான விருதைப் பெற்றார். நான் ராஜாவாக போகிறேன், சூது கவ்வும், பீட்சா, ஆடாம ஜெயிச்சோமடா ,மசாலா படம், கோ 2, பெங்களூர் நாட்கள் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிகை ரேஷ்மி மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முத்ரா என்ற மகளும் அர்ஜுன் சிம்ஹா என்ற மகனும் இருக்கிறார்கள். இவர் நடிப்பில் வெளியான ‘ராவண கல்யாணம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை மனைவி ரேஷ்மி மேனன் தயாரித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்பொழுது இவர் வசந்தா என்ற வெப் சீரியசிலும் மற்றும் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
இவர் மீது சமீபத்தில் அரசு விதிகளை மீறி கொடைக்கானலில் மலை கிராம விவசாயிகள் செல்லக்கூடிய சாலையை ஆக்கிரமித்து மூன்று மாடி கட்டிடத்தை கட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் பாபி சிம்ஹா தற்பொழுது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…
