LATEST NEWS
முதல் மனைவி விவாகரத்து..! – 43 வயதில் இளம் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த கோலி சோடா பட நடிகர்..!
மலையாள திரையுலகில், பிரபல இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியிருந்த படம் தான் ‘நாயகன்’. இப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார் நடிகர் செம்பன் வினோத் ஜோஸ். இது தான் நடிகராக இவர் அறிமுகமான முதல் மலையாள திரைப்படமாம். இதனைத் தொடர்ந்து, இவர் பல மலையாள படங்களில் நடித்தார் நடிகர் செம்பன் வினோத் ஜோஸ்.
அதன் பிறகு தமிழ் திரையுலகில் ‘கோலி சோடா 2’. இவர் நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் ‘தில்லை’ என்ற கதாபாத்திரத்தில் வலம் வந்திருந்தார். மேலும் நடிகர் செம்பன் வினோத் ஜோஸ், சுனிதா என்பவரை செம்பன் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜான் க்ரிஸ் செம்பன் என்ற மகன் உள்ளார். அதன் பிறகு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் செம்பன் வினோத் ஜோஸ்.
இந்நிலையில், தான் தற்போது நடிகர் செம்பன் வினோத் ஜோஸ், மரியம் தாமஸ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளி வந்திருக்கிறது. இத்தகவலை நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இந்த விஷயம் சற்று அதிர்ச்சியாக தான் உள்ளது அவர்களது ரசிகர்களுக்கு என்று தான் சொல்ல வேண்டும்.
