LATEST NEWS
நடிகை நயன்தாராவின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா..? – முதல் முறையாக இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..!
நயன்தாரா இன்று லேடி சூப்பர்ஸ்டார் என்று தென்னிந்தியாவே கொண்டாடும் நடிகர். தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போ ட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார். டாப் ஹீரோக்களின் படம் என்றாலே பர்ஸ்ட் சாய்ஸ் நயன் தான் என்கிற அளவிற்கு முன்னணி ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கின்றனர்.
நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து சந்திரமுகி வல்லவன், பில்லா படத்தின் மூலம் செம பேமஸ் ஆனவர். படத்தில் ஹீரோவை உருகி, உருகி காதலிக்கும் ஹீரோயின் கதாபாத்திரங்களை எல்லாம் விட்டுவிட்டு, கதையின் நாயகியாக வலம் வரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில், பிகில், தர்பார் என விஜய், ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.
இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் உள்ளார், விரைவில் திருமணம் செய்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இவர் நடிப்பில் தற்போது மூக்குத்தி அம்மன் தயாராகி வருகிறது. இந்நிலையில்,இவரின் அம்மா, அப்பாவை பலரும் பார்த்திருக்க வாய்பில்லை, இதோ உங்களுக்காக…
