“ரன் அவுட்” கிடையாது.. ரீ-என்ட்ரி…” திருமணம் முடிந்து ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா… குஷியில் ரசிகர்கள்…!! – cinefeeds
Connect with us

CINEMA

“ரன் அவுட்” கிடையாது.. ரீ-என்ட்ரி…” திருமணம் முடிந்து ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா… குஷியில் ரசிகர்கள்…!!

Published

on

தென்னிந்தியத் திரையுலகின் நட்சத்திரத் தம்பதிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி ராஜஸ்தானில் கோலாகலமாகத் தங்களது திருமணத்தை முடித்தனர். இதனைத் தொடர்ந்து ஐதராபாத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பிஸியாக இருந்த இவர்கள், தற்போது ஒரு மாத இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர். தாங்கள் ஏற்கனவே இணைந்து நடித்து வந்த ‘ரணபாலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருவரும் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். படப்பிடிப்பு தளத்திற்கு வந்த புதுமணத் தம்பதிக்குத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கலைஞர்கள் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

19-ஆம் நூற்றாண்டின் வரலாற்றுச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்படும் இத்திரைப்படத்தில், விஜய் தேவரகொண்டா ‘ரணபாலி’ என்ற பெயரிலும், ராஷ்மிகா ‘ஜெயம்மா’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இப்படத்தில் இடம்பெற்று ஏற்கனவே வெளியான ‘எந்தையாசாமி’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்குப் பிறகும் தங்களது கலைப்பயணத்தைத் தொய்வின்றித் தொடரும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இப்படம் இவர்களது திரைவாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in