CINEMA
“விஜயகாந்தால் முடியாததை தம்பி விஜய் செஞ்சுட்டாரு…””திமுகவின் 6 மாத கணக்கு காலி…” முதலமைச்சர் விஜய்யின் ‘சைலண்ட்’ ஆட்சியைப் பற்றி தியாகு சொன்ன ‘அந்த’ விஷயம்…!
திரையுலகில் கேப்டன் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக வலம் வந்த பழம்பெரும் நடிகர் தியாகு, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அந்தப் பேட்டியில் பேசியுள்ள தியாகு, “என் நண்பன் விஜயகாந்த் ஒருநாள் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் என்று நான் ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது நடக்காமல் போன அந்த இடத்தை, இன்று தம்பி விஜய் மிகச்சரியாக நிரப்பிவிட்டார்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் தற்போதைய ஆட்சி முறை குறித்துப் பாராட்டிய தியாகு, லஞ்சம், போதைப்பொருள் புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிப்பதாக விஜய் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், எந்தவித ஆடம்பரமும் இன்றி, அமைதியான முறையில் விஜய் தனது பணிகளில் முழு கவனம் செலுத்தி முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்து வருவதாகவும், இது ஒருசிலருக்குப் பிடிக்காமல் போகலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுக இன்னும் ஆறு மாதங்கள் காத்திருக்கலாம் என்று கணக்கு போடுவதாகக் கூறப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த தியாகு, அதற்கு இனி வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார். திருமாவளவன், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் எனப் பலரும் தற்போது விஜய்யின் பக்கம் சாய்ந்துவிட்டதால், ஐந்து ஆண்டுகள் விஜய் தான் உறுதியாக முழுமையாக ஆட்சி செய்வார் என்றும் அவர் கணித்துள்ளார். விஜயகாந்துடன் பல படங்களில் இணைந்து நடித்து, பின்னாட்களில் ஏற்பட்ட அரசியல் கருத்து வேறுபாட்டால் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைந்த தியாகு, தற்போது விஜயகாந்தின் அரசியல் கனவோடு விஜய்யின் வெற்றியை ஒப்பிட்டுப் பேசியிருப்பது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.
