LATEST NEWS
ரிஸ்க் இல்லாத அரசு முதலீடு…! மாதம் ரூ.5,000 சேமித்தால் போதும்… லட்சக்கணக்கில் லாபம் தரும் அசத்தலான பிபிஎஃப் திட்டம்…. முழு விவரம் இதோ…!!
மத்திய அரசால் நடத்தப்படும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்ற சிறு சேமிப்புத் திட்டம், எவ்வித நஷ்ட பயமும் இல்லாத மிகப்பாதுகாப்பான நீண்ட கால முதலீட்டு வாய்ப்பாகக் கருதப்படுகிறது. இத்திட்டத்திற்குத் தற்போது ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்டு வரும் சூழலில், இதன் முதிர்வுக் காலம் 15 ஆண்டுகள் ஆகும்.
இதில் முதலீடு செய்யப்படும் தொகை, அதற்குக் கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுக்குப் பின் கைகளில் கிடைக்கும் ஒட்டுமொத்தப் பணம் ஆகிய மூன்றிற்குமே வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் முழுமையான வரி விலக்கு (EEE) அளிக்கப்படுகிறது. எதிர்காலப் பாதுகாப்பிற்காக எவ்வித ரிஸ்க்கும் எடுக்காமல் ஒரு பெரிய தொகையைச் சேமிக்க நினைக்கும் நடுத்தரக் குடும்பத்தினருக்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக விளங்கி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஒருவர் மாதம் தோறும் 5,000 ரூபாய் வீதம் முதலீடு செய்து வந்தால், ஒரு வருடத்திற்கு 60,000 ரூபாயும், 15 ஆண்டுகளில் மொத்தமாக 9 லட்சம் ரூபாயும் கணக்கில் டெபாசிட் ஆகியிருக்கும். தற்போதைய வட்டி விகித அடிப்படையிலான கூட்டு வட்டியின் (Compound Interest) பயனால், 15 வருட முதிர்வுக் காலத்தின் முடிவில் முதலீட்டாளருக்குத் தோராயமாக 16 லட்சம் முதல் 17 லட்சம் ரூபாய் வரை மொத்த நிதியாகக் கிடைக்கும்.
அதாவது, நாம் சேமித்த 9 லட்சத்திற்கு வட்டி வருமானமாக மட்டுமே சுமார் 7 லட்சம் ரூபாய் வரை கூடுதலாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை முதலீட்டுத் தொகையை மாதம் 10,000 ரூபாயாக உயர்த்தினால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகையானது 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் கிட்டும் என்பதால் இதில் முறையான தொடர் முதலீடு அவசியமாகிறது.
