CINEMA
“ஷாருக்கான், பவன் கல்யாண் நோ சொன்னதால் வந்த வினை…இனி யாரையும் கேட்க வேண்டாம்… கடுப்பான இயக்குநர் நெல்சன்…செப்டம்பரில் வெளியாகும் ஜெயிலர் 2..! படப்பிடிப்பு முடியும் வேளையில் ரசிகர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ‘ஜெயிலர் 2’. கடந்த 2023-ஆம் ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்ததைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியானது. தற்போது நெல்சன் இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி நிலையை எட்டியுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஜெயிலர்’ முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு அதில் கேமியோ வேடங்களில் வந்த மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரின் அதிரடி காட்சிகளும் முக்கிய காரணமாக அமைந்தன. தியேட்டர்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த மேஜிக்கை இரண்டாம் பாகத்திலும் தொடர இயக்குநர் நெல்சன் திட்டமிட்டிருந்தார். அதன்படி, இப்படத்தின் முக்கிய கேமியோ ரோலில் நடிக்க முதலில் பாலிவுட் பாதுஷா ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் மறுக்கவே, தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாணிடம் பேசப்பட்டது. அவரிடமிருந்தும் சரியான பதில் வராததால், இறுதியாகப் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனைப் படக்குழுவினர் அணுகியுள்ளனர்.
இப்படிப் பல முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், இந்த முக்கிய கேமியோ கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான நடிகர் அமைவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் யாரும் எதிர்பாராத அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நட்சத்திரங்களின் கால்ஷீட்டுக்காக இனி காத்திராமல், அந்தப் குறிப்பிட்ட கேமியோ கதாபாத்திரத்தையே படத்தின் கதையிலிருந்து அவர் முழுமையாகத் தூக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இயக்குநரின் இந்த திடீர் மாற்றம் ‘ஜெயிலர் 2’ படத்தின் திரைக்கதையை மேலும் விறுவிறுப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
