CINEMA
பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் இல்லைனாலும் விஜய்யா காரணம்?…லாரன்ஸைத் தொடர்ந்து…அதிகாரிகளுக்கு நாங்க ஓட்டு போடல…” – விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்… ஸ்ரீமன் பேட்டியால் கிளம்பிய புதுப்புயல்…!
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது திரைத்துறையினரிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களது துறையைச் சேர்ந்த ஒருவர் மாநிலத்தை ஆள்கிறார் என்ற உற்சாகத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரம், விஜய்யின் தவெக ஆட்சிக்கு ஆதரவாகப் பேசுகிறேன் பேர்வழி என்று களமிறங்கும் சினிமா பிரபலங்களின் சில கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பி வருகின்றன.
சமீபத்தில், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நடன இயக்குநர் ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, புதிய ஆட்சியின் விமர்சகர்களை ‘தெரு நாய்’களுடன் ஒப்பிட்டுப் பேசியது பெரும் புயலைக் கிளப்பியது. “யாராவது புது ஆள் வந்தால் தெரு நாய் கத்தத்தான் செய்யும்; அதற்குப் பிடித்த பிஸ்கட்டோ பிரியாணியோ போட்டு கத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என லாரன்ஸ் பேசியதற்குப் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தான் கூறவந்த கருத்து அதுவல்ல என்று உடனடியாக விளக்கமளித்து அந்தப் பிரச்னையில் இருந்து தற்காலிகமாக ‘டிஸ்சார்ஜ்’ ஆனார்.
லாரன்ஸ் பிரச்னை ஓயும் முன்பே, விஜய்யின் உற்ற நண்பரான நடிகர் ஸ்ரீமன் தற்போது நெட்டிசன்களிடம் சிக்கியுள்ளார். சமீபத்திய பேட்டியில் விஜய்யின் ஆட்சி மீதான விமர்சனங்களை மறுத்துப் பேசிய ஸ்ரீமன், “இத்தனை கோடி பேரில் எங்கியோ ரெண்டு பேர், நாலு பேர் தவறு செய்வதை பூதாகரமாக்குகிறார்கள்; பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் இல்லை என்றால்கூட முதலமைச்சரை டேக் செய்கிறார்கள்” என்று சாடினார். இதற்கு நெட்டிசன்கள், “மக்கள் அதிகாரிகளை நம்பி ஓட்டு போடவில்லை, விஜய்யை நம்பித்தான் வாக்களித்தார்கள்; பிறகு மாநிலப் பிரச்னைகளுக்கு முதலமைச்சரைக் கேட்காமல் யாரைக் கேட்பது?” என்று கேள்வி எழுப்பி ஸ்ரீமனை சமூக வலைத்தளங்களில் கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர்.
