LATEST NEWS
பிபி பார்க்க வந்த இடத்தில் பாலியல் அராஜகம்…. நர்சிடம் கைவரிசை காட்டிய பிடிஓ…. இரத்தம் சொட்ட ஓடிய அதிகாரி…. பரபரப்பு சம்பவம்…!!!
சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம் மூலப்புதூர் பகுதியில், ரத்த அழுத்தப் பரிசோதனை செய்ய வந்த வட்டார வளர்ச்சி அதிகாரி (பிடிஓ) இளங்கோ என்பவர், அங்கு பணியில் இருந்த பெண் கிராம சுகாதார செவிலியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநாகரிகச் செயலால் அதிர்ச்சியடைந்த செவிலியர் அங்கேயே அவரைச் சத்தம் போட்டுள்ளார். இத்தகவலை அறிந்த செவிலியரின் தம்பி மணிகண்டன், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்து சம்பந்தப்பட்ட அதிகாரியைத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அரசு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி செவிலியரின் தம்பியைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
தம்பியின் கைதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் காவல் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட செவிலியரும் முறைப்படி காவல் துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் தப்பியோடிய அதிகாரி இளங்கோ மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் தவெக அரசு மீது தொடர் விமர்சனங்களை முன்வைத்து வரும் வேளையில், அரசு பெண் ஊழியருக்கே நேர்ந்த இந்த அவலம், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
