நம்பவே மாட்டேங்குறாங்க…முடிவுக்கு வந்ததா தனுஷ் – மிருணாள் தாகூர் காதல்…தனுஷ் உடனான காதல் வதந்திக்கு நடுவே மிருணாள் எடுத்த திடீர் முடிவு…! – cinefeeds
Connect with us

CINEMA

நம்பவே மாட்டேங்குறாங்க…முடிவுக்கு வந்ததா தனுஷ் – மிருணாள் தாகூர் காதல்…தனுஷ் உடனான காதல் வதந்திக்கு நடுவே மிருணாள் எடுத்த திடீர் முடிவு…!

Published

on

நடிகர் தனுஷ் மற்றும் பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் ஆகிய இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில காலமாகவே சமூக வலைதளங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் பரவலான பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்த பிறகு, தனுஷ் இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார் என்ற வதந்திகளுக்கு மத்தியில், அவரும் மிருணாளும் அடிக்கடி டேட்டிங் செல்வதாகவும் செய்திகள் கசிந்தன. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, இருவரும் பார்ட்டிகளில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதோடு, தனுஷின் சகோதரிகளை மிருணாள் திடீரென இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யத் தொடங்கினார். இதனால் இவர்கள் இருவரும் தீவிரமான ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கோலிவுட் மற்றும் பாலிவுட் ரசிகர்கள் உறுதியாக நம்பினர்.

இருப்பினும், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மிருணாள் தாகூர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், தனுஷை தனக்கு பிடிக்குமே தவிர, தங்களுக்குள் காதல் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்திருந்தார். ஆனால், அவர் மறுத்த பிறகும் ரசிகர்கள் அதனை நம்பத் தயாராக இல்லாத சூழலில், தற்போது இந்த விவகாரத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, தனுஷும் மிருணாளும் தங்களது உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என்று பேசி முடிவெடுத்து, பரஸ்பரம் பிரிந்துவிட்டதாக (பிரேக் அப்) சினிமா வட்டாரத்தில் புதிய தகவல் ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. காதல் செய்தியையே நம்ப மறுத்த ரசிகர்கள் மத்தியில், தற்போது இந்த பிரேக் அப் செய்தி திரைத்துறையில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in